நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்துகள் – கமலா ஹாரிஸ்!

Filed under: உலகம் |

அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் அமெரிக்க மக்களுக்கு நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

U.S. Senator Kamala Harris (D-CA) accepts the Democratic vice presidential nomination during an acceptance speech delivered for the largely virtual 2020 Democratic National Convention from the Chase Center in Wilmington, Delaware, U.S., August 19, 2020. REUTERS/Kevin Lamarque

அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மூன்றாம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் மீண்டும் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். பின்பு ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுகிறார். இதில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்த இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

தற்போது இரு கட்சியினரும் அமெரிக்காவில் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கமலா ஹாரிஸ் அமெரிக்க மக்களுக்கு நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதை பற்றி அவரின் ட்விட்டர் பதிவில்; நமது இந்து அமெரிக்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும், கொண்டாடும் அனைவருக்கும், மிகவும் மகிழ்ச்சியான நவராத்திரி வாழ்த்துக்கள். இந்த விடுமுறை நம்முடைய சமூகங்களை உயர்த்துவதற்கும், மேலும், அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் நியாயமான அமெரிக்காவை உருவாக்குவதற்கும் நம் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக அமையட்டும் என பதிவிட்டுள்ளார்.