ஆளுனரை முதலமைச்சர் சந்திக்க காரணம்?

Filed under: சென்னை,தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை நேரில் சந்திக்க உள்ளார்.

இச்சந்திப்பின்போது சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நிலுவையிலுள்ள மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது குறித்து பேசப்படலாம் என்றும் பேசப்படுகிறது. நீட் தேர்வு மசோதா உள்பட பல்வேறு மசோதாக்கள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அந்த மனுக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படாமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.