இலங்கையில் என்ன நடக்கிறது?

Filed under: உலகம் |

கடனை திரும்ப செலுத்த இயலாமல் கைவிரிப்பு! இலங்கையில் நடப்பது என்ன?

இலங்கை பொருளாதார நெருக்கடியால் மக்களின் இயல்பு நிலையே முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அன்றாட தேவைக்காக போராட்டங்களில் ஈடுபட்டள்ளனர். கடும் விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஆகிவற்றால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். இதோடு மட்டுமல்லாமல் மின்வெட்டு அமலில் உள்ளது. தங்கமும் ஒரு சவரன் ரூ.1.35 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று சவரன் ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை (ஏப்ரல் 13, 14) முன்னிட்டு மின்சாரம் துண்டிக்கப்பட போவதில்லை என இலங்கையின் பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதே போன்று 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வெறும் 2.15 மணி நேரம் மட்டுமே மின்சாரம் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாடுகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் கோரியுள்ளது இலங்கை. பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால், தற்போது கடனை திரும்பி தர இயலாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்தபோது இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு 7.6 பில்லியன் டாலர்களாக இருந்தது. ஆனால் சில மாதங்களிலேயே அது 2.3 பில்லியன் டாலர்களாகக் குறைந்து விட்டது எனவும் கூறப்படுகிறது.