உடுமலை அதிமுக பெண் கவுன்சிலர் மரணம்!

Filed under: Uncategory |

அதிமுகவைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் திடீரென இன்று காலமானார்.

உடுமலை 7-வது வார்டு நகராட்சி கவுன்சிலர் ரம்யா என்பவர் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ரம்யா கடந்த சில நாட்களாக, நோய்வாய்ப்பட்டு இருந்திருக்கிறார். ரம்யாவை, கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.
தகவல் அறிந்த உடுமலை, திருப்பூர் மாவட்ட அதிமுகவினர், நகர்மன்ற உறுப்பினர்கள் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.