உத்திரபிரதேசத்தில் அதிர்ச்சியான சம்பவம்!

Filed under: இந்தியா |

13 வயது சிறுவன் கைக்குழந்தையை நீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் உத்திர பிரதேசத்தில் நடந்தேறியுள்ளது.

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த கைக்குழந்தை மாயமாகியுள்ளது. இந்த நிகழ்வு உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் அலிகஞ்ச் என்ற பகுதியை சேர்ந்தவர் கேசவ் ராகுல். இவருக்கு ஒரு வயதில் ரீத்து என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைதான் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த பள்ளியின் நீர் தொட்டியில் குழந்தை இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. மேலும் குழந்தையின் காலில் செங்கல் கட்டப்பட்டிருந்தது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் உள்ள பலரிடம் விசாரித்தபோது 13 வயது சிறுவன் சந்தேகத்திற்கிடமான வகையில் பேசியுள்ளான். சிறுவனை மேலும் விசாரித்தபோதுதான் உண்மை நிலவரம் தெரிய வந்துள்ளது. சில நாட்கள் முன்னதாக அந்த சிறுவன் தனது சைக்கிளை கேசவ் ராகுல் வீட்டருகே நிறுத்தியுள்ளான். அதற்காக கேசவ் ராகுல் சிறுவனை அடித்ததுடன், கேவலமாக திட்டியும் உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் கேசவ்வை பழி வாங்க அவரது குழந்தையை நீர் தொட்டியில் போட்டு கொன்றதாக கூறியுள்ளான்.

இதனையடுத்து சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போலீசார் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.