இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 83.5 சதவீதமாக அதிகரிப்பு!

Filed under: இந்தியா |

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் எண்ணிக்கை தினதோறும் அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 63,12,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 98,678 பேர் உயிரிழந்துள்ளனர், 52,73,201 குணமடைந்துள்ளனர். மேலும், 9,40,705 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

https://twitter.com/COVIDNewsByMIB/status/1311519183201468416

தற்போது குணமடைந்தோர் விகிதம் 83.5 சதவீதமாக அதிகரித்துள்ளது மற்றும் இறப்பு விகிதம் 1.6 சதவீதம் குறைவாக உள்ளது. பின்பு சிகிச்சை பெறுவோரின் விகிதம் 14.9 சதவீதம் குறைவாக உள்ளது.

https://twitter.com/ICMRDELHI/status/1311503861228609537

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 14,23,052 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 7,56,19,781 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.