உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம்!

Filed under: இந்தியா,சென்னை,தமிழகம் |

ஒடிசா மாநிலத்தில் நடந்த கோரமான ரயில் விபத்து மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடும், காயம் அடைந்த தமிழர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண தொகை வழங்கப்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மத்திய அரசு சார்பில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.