எல்ஐசி அதானி குழுமத்தில் முதலீடு செய்ததால் ஆயிரக்கணக்கான கோடி நஷ்டம் என்று கூறப்படுகிறது. அதானி குழுமத்தின் பங்குகளை மேலும் ரூபாய் 300 கோடிக்கு அதானி குழுமத்தின் பங்குகளை வாங்க எல்ஐசி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் ஹிண்டர்பெர்க் அறிக்கை காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெருமளவில் சரிந்தது. அவ்வகையில் அதானி குழுமத்தில் முதலீடு செய்திருந்த எல்ஐசி நிறுவனத்திற்கு 27 ஆயிரத்து 300 கோடிகள் நஷ்டம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அதானி குழுமம் பங்குகளின் விலை குறைவாக இருந்தபோது எல்ஐசி வாங்கியதாகவும் அதனால் 27 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டாலும் இன்னும் எல்ஐசிக்கு அதானி குழுமத்தின் பங்குகளால் லாபம் தான் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் இறங்கி உள்ள நிலையில் மேலும் 300 கோடி மதிப்பில் ஆன பங்குகளை வாங்க எல்ஐசி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.