எல்.ஐ.சி கட்டிடத்தில் தீ விபத்து!

Filed under: இந்தியா |

மஹாராஷ்டிர மாநிலமான மும்பையில் சாண்டாக்ரூஸ் பகுதியில் உள்ள எல்.ஐ.சி கட்டிடத்தில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்ட நிலையில், மேலும் தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கப் போராடி வருகின்றனர். இதில், யாரும் பாதிக்கப்படவில்லை எனவும், விபத்தில் சிக்கவில்லவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 2வது தளத்தில் இயங்கி வந்த சம்பள சேமிப்புத் திட்டம் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டதில், முக்கிய ஆவணங்கள் மற்றும் கணினிகள் எரிந்தன. இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.