ஐபிஎல் கோப்பையை வாங்கியவுடனே இளம் வீரரிடம் கொடுத்த அழகு பார்த்த டோனி!

கொல்கத்தா அணிக்கெதிரான இறுதிப் போட்டி வெற்றிக்கு பின் கோப்பையை வாங்கிய டோனி, இளம் வீரர் தீபக் சஹாரிடம் கொடுத்து அழகு பார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரின் நேற்றைய இறுதிப் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

இப்போட்டியில் சென்னை அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில், போட்டி முடிந்த பின்பு, கோப்பை அணியின் கேப்டன் ஆன டோனியிடம் கொடுக்கப்பட்டது.

டோனி உடனே அந்த கோப்பையை இளம் வீரர் தீபக் சஹாரிடம் கொடுத்து அழகு பார்த்தார். தீபக் சஹார் பிளே ஆப் துவங்குவதற்கு முன்பு தான் தன்னுடைய காதலை, அவருடைய நெருங்கிய தோழியிடம் மைதானத்திலே வெளிப்படுத்தினார். இந்த யோசனையை டோனி தான் கூறியதாக செய்தி வெளியானது.

இதையடுத்து தற்போது டோனி அவரிடம் கோப்பையை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.