கனமழை பெய்தாலும் எதிர்கொள்ளத் தயார் – துணை முதல்வர் உதயநிதி !

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை, சேப்பாக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். சென்னையில் கனமழை பெய்தது, அமைச்சர்கள் துவங்கி, எம்.எல்.ஏ.,க்கள் கவுன்சிலர்கள் வரை களத்தில் இறங்கி, அனைத்து விதமான பாதுகாப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இப்போது மழை லேசாகத்தான் பெய்துள்ளது. கனமழை பெய்தாலும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி. கனமழையில் கூட சென்னையில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை என்பதே வெள்ளை அறிக்கை தான். இவ்வாறு உதயநிதி கூறினார்.