காஜலுக்கு ஆண் குழந்தை, குவியும் வாழ்த்துக்கள்!

Filed under: சினிமா |

காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்த கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். கர்ப்பமாக இருந்து வந்த காஜல் அகர்வால் தன்னுடைய கர்ப்ப கால போட்டோக்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் பரிமாறி வருகின்றனர். காஜல் அகர்வால் குடும்பத்தினர் பெருமகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

 

தமிழ் சினிமா மட்டுமன்றி தெலுங்கு, கன்னட மொழிகளிலும் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.