இந்திய அணியில் ஷுப்மன் கில், நடராஜன், ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.
இன்று 23 ரன்கள் எடுத்தபோது ஒருநாள் கிரிக்கெட்டில் 12,000 ரன்களைப் பூர்த்தி செய்தார் இந்திய கேப்டன் விராட் கோலி. ஒருநாள் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 300 ஒருநாள் இன்னிங்ஸில் (309-வது ஒருநாள் ஆட்டம்) 12,000 ரன்களை விரைவாக எடுத்து சாதனை செய்திருந்தார். அதை கோலி இன்று முறியடித்துள்ளார். 12,000 ரன்களைக் கடக்க கோலிக்கு 242 இன்னிங்ஸ் (251-வது ஒருநாள் ஆட்டம்) மட்டுமே தேவைப்பட்டுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 12,000 ரன்களைக் கடந்த வீரர்கள் (இன்னிங்ஸ்)
242 விராட் கோலி
300 சச்சின் டெண்டுல்கர்
314 ரிக்கி பாண்டிங்
336 குமார் சங்கக்காரா
379 சனத் ஜெயசூர்யா
399 மஹேலா ஜெயவர்தனே
விரைவாக ஒருநாள் ரன்களைக் கடந்த வீரர்
8000 ஒருநாள் ரன்கள் – கோலி
9000 ஒருநாள் ரன்கள் – கோலி
10000 ஒருநாள் ரன்கள் – கோலி
11000 ஒருநாள் ரன்கள் – கோலி
12000 ஒருநாள் ரன்கள் – கோலி