சென்னையில் மேம்பாலம் அமைக்க ரூ.796 கோடியில் திட்டம்!

Filed under: சென்னை |

நெடுஞ்சாலைத்துறை சென்னையில் ஒன்பது இடங்களில் மேம்பாலம் கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இதற்காக ரூ.796 கோடி மதிப்பில் திட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நெடுஞ்சாலைதுறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. அப்போது நெடுஞ்சாலை துறையின் கொள்கை விளக்க குறிப்பில் சென்னையில் ஒன்பது சந்திப்புகளில் மேம்பாலம் அமைக்க திட்டமிட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இத்திட்டங்களுக்காக ஒன்பது கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் நில எடுப்பு பணிகள் உள்பட மற்ற அனைத்து பணிகளுக்கும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மேம்பாலம் அமையவிருக்கும் சந்திப்புகள் இவைதான்: பி.டி. ராஜன் சந்திப்பு, அக்கரை சந்திப்பு ஆவடி சந்திப்பு, சேலையூர் மற்றும் முகாம் சாலை சந்திப்பு, வேளச்சேரி தாம்பரம் சாலையில் கைவேலி சந்திப்பு, கொரட்டூர் சந்திப்பு. வானகரம் சந்திப்பு, அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் சந்திப்பு.