தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கிவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகளை எடுப்பதற்கு சென்னையிலேயே மிக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பதற்கு சன் பிக்சர்ஸ் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த கொரோனா பிரச்சனை விரைவில் முடிந்து இயல்பு நிலைக்கு, வந்த பிறகு படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டு, 2021 பொங்கல் திருநாளில் படம் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.