சென்னை ஐஐடியில் கொரோனா எண்ணிக்கை மேலும் உயர்வு!

Filed under: சென்னை |

இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஐஐடி வளாகத்தில் உறுதியாகியுள்ளதாக தெரிகிறது.

முக்கியமாக சென்னை ஐஐடியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த நிலையில் சமீப காலமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

ஐஐடி வளாகத்தில் புதிதாக இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் ஐஐடியில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 196 ஆக உயர்ந்துள்ளது. சென்னை ஐஐடியில் விரைவில் கொரோனா பாதிப்பு 200ஐ நெருங்கும் சூழலும் உருவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் ஐஐடியில் அதிகமாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஹாட்ஸ்பாடாக மாறுகிறதா சென்னை ஐஐடி என்ற அச்சமும் எழுந்துள்ளது. மேலும் அனைவரும் மாஸ்குகள் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.