சென்னை கடற்கரை சிந்தாதிரிப்பேட்டையில் ரயில் நிறுத்தமா?

Filed under: சென்னை |

ஆகஸ்டு 27ம் தேதி முதல் சென்னை கடற்கரையிலிருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கிடையே இயங்கி வரும் மின்சார ரயில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

ரூபாய் 279 கோடி செலவில் நான்காவது ரயில் தடம் சென்னை கடற்கரையிலிருந்து எழும்பூருக்கு இடையே அமைக்கப்பட்டவுள்ளது. இப்பணியை 7 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியின் காரணமாக சென்னை சிந்தாதிரிப்பேட்டை மற்றும் கடற்கரை இடையிலான ரயில் சேவை நிறுத்தப்பட உள்ளது. ஆகஸ்ட் 27ம் தேதி முதல் இந்த ரயில் சேவை நிறுத்தப்படும் என்றும் மீண்டும் சேவை தொடங்கும் தேதி பின் அறிவிக்கப்படும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.