சென்னை விமான நிலையத்தில் 3.125 கிலோ தங்கம் பறிமுதல் !

Filed under: இந்தியா,சென்னை,தமிழகம் |

வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திடமிருந்து கிடைத்த பிரத்யேக தகவலின் அடிப்படையில் 10.09.2021 அன்று அதிகாலை 2:30 மணிக்கு ஈகே-542 எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாயிலிருந்து சென்னை வந்த 34 வயது பயணி மற்றும் எஃப்இசட்-447 விமானத்தில் 10.09.2021 அன்று காலை 4 மணிக்கு சென்னை வந்த 35 வயது பயணி ஆகியோர் விமான நிலைய வெளி வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.‌

அவர்களது உடைமைகளை சோதனையிட்டபோது அவர்களது பைகள், பெட்டிகளின் உள்ளே ரூ. 1.33 கோடி மதிப்பில் 3125 கிராம் எடையில் 11 தங்கக் கம்பிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுங்க அதிகாரிகளின் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காக இந்தத் தங்கக் கம்பிகளுக்கு வெள்ளி முலாம் பூசப்பட்டிருந்தது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்கம், சுங்கச் சட்டம் 1962 இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டதோடு, இரண்டு பயணிகளும் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.

இந்தத் தகவல், சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத் துறை முதன்மை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.