செல்பி மோகத்தால் இருவர் பலி!

Filed under: சென்னை |

செல்போனில் செல்பி எடுக்கும் மோகத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் தவறி விழுந்த 2 பேர் பலியான சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையையடுத்த குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (20 வயது), மற்றும் அவரது நண்பர் ரிச்சர்ட் என்பவரும் சேர்ந்து நேற்று மாலை செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க சென்றுள்ளனர். அந்த ஏரியை சுற்றி பார்த்து விட்டு இருவரும் மதகில் ஏறி நின்றபடி செல்பி எடுத்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் ஏரிக்குள் விழுந்து விட்டனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்கக்கூடாது என பலமுறை அறிவுறுத்தியும் இளைஞர்கள் செல்பியால் தங்கள் விலைமதிப்பில்லா உயிரை இழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.