செஸ் ஒலிம்பியாட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு!

Filed under: சென்னை,விளையாட்டு |

செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக பாதுகாப்பு பணியில் 4000 போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்நிகழ்வுக்கு 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 100 ஆய்வாளர்கள் 380 எஸ்.ஐ.க்கள் 3520 காவலர்கள் 17 நாட்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். மேலும் ஒரு காவலருக்கு ரூபாய் 250 வீதம் உணவுப்படியாக 1.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.