ஜோ பைடனுக்கு ஒபாமா பாராட்டு!

Filed under: உலகம் |

நேற்று அல்-கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார். அமெரிக்காவை அச்சுறுத்தி வந்த அல்கொய்தா, அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்த்தது என்பதும் அதற்கு பதிலடியாக அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆட்சியின்போது பின்லேடன் கொல்லப்பட்டார் என்பது மக்கள் அறிந்ததே. தற்போது புதிய அல்கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி என்பவரும் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒபாமா தனது டுவிட்டரில், “செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பதிலடியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு பயங்கரவாதியின் முளையாக செயல்பட்டு அல்கொய்தாவின் தலைவர் கொல்லப்பட்டதற்கு பாராட்டுக்கள்” என்று பதவிட்டுள்ளார்.