டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தும் ரகசியத்தை கூறிய டிராவிட்

Filed under: விளையாட்டு |

டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவதற்கு தேவையான சில டிப்ஸ்களை முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் இந்திய வீரர்களுக்கு வழங்கியுள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியும், அடுத்ததாக நடைபெற்ற டி.20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணியும் கைப்பற்றியுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த சில தினங்களில் துவங்க உள்ளது.

டெஸ்ட் தொடருக்கு முன்னதாக வழக்கமாக நடத்தப்படும் பயிற்சி போட்டிகளில் ஒரு புறம் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான எதிர்வரும் டெஸ்ட் தொடர் குறித்து பல்வேறு விசயங்களை ஓபனாக பேசி வருகின்றனர்.

அசுர பலம் கொண்ட ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவதற்கு தேவையான சில டிப்ஸ்களையும் இந்திய வீரர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவனான ராகுல் டிராவிட்டும், இந்திய அணிக்கு தேவையான சில ஆலோசனைகளை ஓபனாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல் டிராவிட் பேசுகையில், ‘இந்திய அணியால் டெஸ்ட் போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். அதற்கு தகுதியான பவுலிங் யூனிட்டை இந்திய அணி பெற்றுள்ளது. ஆனால், பேட்டிங்கில் 500க்கும் அதிகமான ரன்களை குவிக்கப்போவது யார் என்பது தான் முக்கியமான கேள்வி. யாராவது ஒரு வீரர் அதை செய்து, பெரிய ஸ்கோர் அடித்தால் இந்திய அணி தொடரை வெல்ல வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி;
விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, மாயன்க் அகர்வால், ப்ரித்வி ஷா, கே.எல் ராகுல், சட்டீஸ்வர் புஜாரா, அஜிக்னியா ரஹானே, ஹனுமா விஹாரி, சுப்மன் கில், விர்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது சிராஜ்.