‘டைட்டன்’ விபத்து சினிமாகிறதா?

Filed under: உலகம்,சினிமா |

ஜேம்ஸ் காமரூன் டைட்டானிக் படத்தை இயக்கியவர். இவர் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்தையும் திரைப்படமாக எடுக்கப் போவதாக தகவல் பரவியுள்ளது. ஆனால், இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

110 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய பிரம்மாண்ட கப்பலான டைட்டானிக் கடலுக்குள் மூழ்கியது. இக்கப்பல் மூழ்கிய ஆழ்கடலுக்குள் சென்று இதன் பாகங்களைக் காண்பது பலருக்கு திரிலிங்கான பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வந்தது. இதற்காக சமீபத்தில் ளிநீமீணீஸீநிணீtமீ என்ற நிறுவனத்தின் நீர்மூழ்கி கப்பலில் பிரிட்டனை சேர்ந்த பணக்காரர், பாகிஸ்தானை சேர்ந்த செல்வந்தர் மற்றும் அவரது மகன் என 4 பேர் மற்றும் ஒரு நீர்மூழ்கி இயக்குபவருடன் நீர்மூழ்கி ஆழ்கடலுக்குள் சென்றது. அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கி கிடக்கும் டைட்டானிக்கை காண சென்ற குழுவின் நீர்மூழ்கியுடனான தொடர்பு 2 மணி நேரங்களுக்கு பிறகு மாயமானது. மாயமான நீர்மூழ்கியை அமெரிக்க கடற்படை கப்பல்கள், மற்றும் நீர்மூழ்கிகள் தீவிரமாக தேடி வந்தன. இதில். 5 பேர் கொண்ட குழு சென்ற நீர்மூழ்கி கப்பல் ஆழ்கடலில் வெடித்து விபத்திற்குள்ளாகி, இதில் பயணித்த 5 பேரும் கடலுக்கு அடியில் பலியாகி விட்டதாகவும் தகவல் வெளியானது. “டைட்டானிக்” திரைப்படத்தை இயக்கிய ஜேம்ஸ் காமரூன், டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்தையும் சினிமா படமாக எடுக்க இருப்பதாக தகவல் பரவியது. இதுகுறித்து வெளியான தகவலை ஜேம்ஸ் கேமரூன் மறுத்துள்ளார். இவருக்குப் பதில் மற்ற ஹாலிவுட் இயகுநர்கள் இதை சினிமாவாக எடுக்க ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகிறது.