தவறைத் தவிர்த்திருக்கலாம் – சூப்பர் ஸ்டார் ரஜினி ட்வீட்!

Filed under: சென்னை |

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா திருமண மண்டபம் சென்னை ரங்கராஜபுரத்தில் உள்ளது. இந்த மண்டபத்தின் சொத்து வரி விதித்ததை குறித்து வழக்கு தொடரப்பட்டது.

இதை அடுத்து, ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி விதித்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்த நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஐகோர்ட்டு கண்டனத்தை தெரிவித்தது. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக கூறியும் மற்றும் அபராதம் விதிக்கப்போவதாக நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை அடுத்து அந்த வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது.

இதனை குறித்து ரஜினிகாந்தின் ட்விட்டர் பதிவில்; ராகவேந்திரா மண்டப சொத்து வரி. நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். அனுபவமே_பாடம் என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்துவரி ரூ.6.5 லட்சத்தை மாநகராட்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் செலுத்தியுள்ளார்.