திமுகவினர் அச்சப்படும் அளவு முதல்வர் பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார்

Filed under: அரசியல்,தமிழகம் |

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட பென்னாலூர்பேட்டையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் பேசிய சிறுணியம் பலராமன், திமுகவினர் பயப்படும் அளவுக்கு, முதலமைச்சர் சிறப்பாக செயலாற்றி வருவதாகவும், கொரோனாவை விரட்டி அடித்த ஒரே முதல்வர் எடப்பாடியார் என்று தமிழகம் வந்த உள்துறை அமைச்சரே, முதல்வரை பாராட்டியதாகவும் தெரிவித்தார். மேலும், தொடர்ந்து 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து, திமுகவை அடியோடு ஒழிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.