துருக்கி நிலநடுக்கத்திற்கு வைரமுத்துவின் கவிதை..!

Filed under: உலகம்,சினிமா |

பூகம்பம் காரணமாக துருக்கியில் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏராளமான பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அறிக்கைகள் வெளியாகி உள்ளன. துருக்கி நாட்டிற்கு ஏற்பட்ட துரதிஷ்டமான இந்நிலைக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கவிப்பேரரசு வைரமுத்து தனது டுவிட்டரில் கவிதை வடிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது
ரிக்டர் கருவிகள் வெடித்துவிட்டன
வான்தொட்ட கட்டடங்கள்
தரைதட்டிவிட்டன
மனித உடல்கள் மீது
வீடுகள் குடியேறிவிட்டன
மாண்டவன் மானுடன்;
உயிர் பிழைத்தவன்
உறவினன்
உலக நாடுகள்
ஓடி வரட்டும்
கண்ணீர்
சிவப்பாய் வடியும் நேரம்