இன்று காலை மூன்று மாநிலத்தில் அடுத்தடுத்து பூகம்பம் – அச்சத்தில் மக்கள்!

Filed under: இந்தியா |

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் தவாங் நகரில் இன்று காலை 8.21 மணி அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பூகம்பம் 3.0 ரிக்டர் பதிவாகி இருப்பதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.

இதை போல மணிப்பூர் மாநிலத்தின் காம்ஜோங் பகுதியில் இன்று அதிகாலை 3.12 மணி அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பூகம்பம் 3.4 ரிக்டர் பதிவாகி உள்ளது.

இதையடுத்து இமாசலப் பிரதேச மாநிலத்தின் லஹால் மற்றும் ஸ்பிடி ஆகிய பகுதியில் இன்று அதிகாலை அதிகாலை 2.43 மணி அளவில் பூகம்பம் உணரப்பட்டு உள்ளது. இது 3.3 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது.

இந்த தகவல்களை தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.