தென்னக ரயில்வேயின் அறிவிப்பு!

Filed under: Uncategory |

தென்னக ரயில்வே கேரளாவுக்கு இயக்கப்படும் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

தென்னக ரயில்வே தமிழகம் உள்பட கேரளாவுக்கு இயக்கப்படும் 22 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் முதல் காயங்குளம் என்ற பகுதி வரை ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு செல்லும் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில்கள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளும்படி பயணிகளுக்கு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மீண்டும் வழக்கம்போல் ரயில்கள் இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.