தேசிய விருது பெற்றவர்களை பாராட்டிய ரஜினி!

Filed under: சினிமா |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். தேசிய விருதுகளை பெற்ற கலைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நேற்று அறிவிக்கப்பட்ட 2020ம் ஆண்டிற்கான தேசிய விருதுகளில் சூர்யா தயாரித்து, ஹீரோவாக நடித்திருந்த “சூரரைப் போற்று” படம் 5 விருதுகளையும், இயக்குனர் வசந்த் இயக்கிய “சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்” படம் 3 விருதுகளையும், யோகிபாபு நடித்த “மண்டேலா” படம் 2 விருதுகளையும் வென்றது. தமிழ் சினிமா 10 விருதுகளை வென்று பெருமைப்பட வைத்துள்ளது. தேசிய விருதுகளை பெற்ற கலைஞர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் தனது சமூக வலைதளத்தில் “#ழிணீtவீஷீஸீணீறீதிவீறீனீகிஷ்ணீக்ஷீபீs தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும் @ஷிuக்ஷீவீஹ்ணீ_ஷீயீயீறீ, சூரரைப் போற்று பட இயக்குநர் மற்றும் விருது பெறும் திரையுலகக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்” என பதிவிட்டுள்ளார்.