தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்த வதந்தி!

Filed under: அரசியல் |

கடந்த சில மணி நேரங்களாக திடீரென வலைதளங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் குறித்த வதந்தி பரவி உள்ளது. இதுபற்றி பிரேமலா விளக்கம் அளித்துள்ளார்.

விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து சற்றுமுன் திடீரென இணைய தளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இதையடுத்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா “விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். அவருடைய உடல்நிலை பற்றி தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம். மேலும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு நாளை தலைமைக் கழகத்திற்கு விஜயகாந்த் வருகிறார். அவரை சந்திக்க தொண்டர்கள் தாராளமாக வரலாம்” என்று விளக்கமளித்துள்ளார்.