பிரபல நடிகையான மீனாவின் கணவர் வித்யாசாகரின் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது ஒட்டு மொத்த திரைத்துறையையும் பயங்கர அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமாகி இன்று தமிழில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் நடித்துக் கொண்டிருப்பவர் மீனா. இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மீனா பெங்களூருவை சேர்ந்த மென் பொறியாளர் வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வித்யாசாகர் கொரோனா நோய் தொற்றால் சமீபத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். வித்யாசாகரின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் இரவு 9 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி வித்யாசாகர் உயிரிழந்தார். 48 வயதே ஆன வித்யாசாகரின் மரணம் ஒட்டு மொத்த சினிமாத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துரையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.