முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திருமுல்லைவாயலில் குடியிருக்கும் நரிக்குறவர் இன மக்களை சந்தித்தார்.
அப்போது அவர் குறவர் இன மக்களுக்கு குடும்ப அட்டைகள், முதியோர் உதவித்தொகை உதவிகளையும் வழங்கினார். அதன்பிறகு மு.க.ஸ்டாலின் ஆவடி பஸ்நிலையம் அருகில் உள்ள நரிக்குறவர் குடியிருப்புக்கு சென்றார். அங்கு புதிதாக அமைக்கப்பட்ட உயர் கோபுர விளக்குகள் மற்றும் குடிநீர் குழாயை திறந்து வைத்தார்.
பின்னர் நரிக்குறவர் மாணவிகளுடன் கலந்துரையாடினார். இது மட்டுமின்றி அங்கு மாணவிகளின் வீட்டில் இட்லி மற்றும் வடை சாப்பிட்டு மாணவிகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார். அதோடு அங்கு வழங்கப்பட்ட உணவு காரமாக இருந்ததாக கூறியபோது இவ்வாறு காரமாக உண்பதால் தான் சளி, இருமல் வருவதில்லை என நரிக்குறவர் சமூகத்தினரிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.