நாகை : சீருடை பணியாளர்கள் குடும்பம் பரிதவிப்பு!

Filed under: தமிழகம் |

நாகை, ஏப்ரல் 25
மூர்த்தி (எ) சிற்பி

நாகப்பட்டினத்தில் டி.எஸ்.பி.அலுவலகத்தின் பக்கத்தில் காவல்கள் அங்காடி உள்ளது. அதன் அருகில் காவலர்கள் குடியிருப்புகள் இருப்பதால் காவலர்கள் பணியில் இருக்கும் போது குடும்பத்தினர் அங்காடியில் மளிகை பொருள் மற்றும் தேவையான பொருள்கள் வாங்குவதற்கு ஏதுவாக இருந்தது. இதில் சிறை காவலர்கள், வன விலங்குதுறை, தீயணைப்பு துறை, காவல் துறை போன்றவர்கள் பயன் பெற்று வந்தனர்.

ஆயுதப்படையின் டி.எஸ்.பி யின் மேற்பார்வையில் இயங்கி வந்த அங்காடி, கடந்த ஒரு மாத காலமாக மளிகை பொருள் இருப்பு இல்லையாம். இப்பொருள் வாங்குவதற்கு டி.எஸ்.பி., நாகை எஸ்.பி. செல்வ நாகரெத்தினமிடம் ஒப்புதல் பெற்று வாகணம் மூலம் தஞ்சாவூர் சென்று வாங்கி வர வேண்டும்.

எஸ்.பி. செல்வ நாகரெத்தினம்

தற்போது கொரோணா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் குடும்பத்தினரை கூட பார்க்க முடியாமல் இருக்கின்றனர். காவலர்களின் வீட்டு பெண்கள் வெளியில் சென்று மளிகை மற்றும் பொருள்கள் வாங்குவதற்கு சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

நாகை எஸ்.பி. இதை கவனித்து நடவடிக்கை எடுப்பாரா.?