பிப்ரவரி மாதம் முதல். 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி.. !!

Filed under: தமிழகம் |

தமிழகத்தில் 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு பிப். 1 முதல் பள்ளிகளை திறக்க தமிழக பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலால் கடந்த ஆண்டு மார்ச்சில் தமிழக பள்ளிகள் மூடப்பட்டன. பொதுத் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பிறகு இம்மாதம் 19-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளில் வகுப்புகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர்கள், ஆசிரியர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது பள்ளிக்கு வரும் மாணவ – மாணவியருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதன் முடிவுகள் ஜன., இறுதியில் தெரிய வரும்.

அதில் தொற்று எண்ணிக்கை குறைந்த அளவில் பதிவானால் மட்டுமே பிப். 1 முதல் 9 மற்றும் 11 வகுப்புக்கும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை செயலகத்தில் திங்களன்று ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இதில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், முதன்மை செயலர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.