பிரதமர் திறந்த வைத்த ரயில் பாதைகள்!

Filed under: சென்னை,தமிழகம் |

இன்று பிரதமர் மோடி சென்னை வந்தார். அவர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தமிழகத்தில் உள்ள பல்வேறு ரயில் பாதைகளை தொடங்கி வைத்தார்.

பெங்களூரு-விலிருந்து சென்னை நான்கு வழி விரைவு சாலையின் 3ம் கட்ட பணி, துறைமுகம் – மதுரவாயல் 2 அடுக்கு மேல் நிலை சாலை, ரூ.450 கோடி செலவில் மதுரை – தேனி அகலப்பாதையில் ரயில் சேவை, ரயில் நிலையங்களின் மறு சீரமைப்பு பணிகள், ரூ.256 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தாம்பரம் – செங்கல்பட்டு 3வது பாதை திறப்பு போன்ற நாட்டு நலப்பணிகளை துவக்கி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.