போர்டு கார் தொழிற்சாலை சென்னை மறைமலைநகரில் செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையை வரும் ஜூன் 30ம் தேதியுடன் மூடப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
போர்டு கார் தொழிற்சாலை நஷ்டம் காரணமாக மூடப்பட்டுள்ள நிலையில் அந்த தொழிற்சாலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
கார் தொழிற்சாலையின் நிர்வாகம் தொழிலாளர்களின் கருத்தை கேட்காமலே அதை மூட முடிவு எடுத்துள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் புகார் அளித்தன. தொழிற்சாலையை மூட நிர்வாகம் முடிவு தொழிலாளர்களுக்கு பெயர் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் தொழிற்சாலை மூடப்படுவதால் நேரடியாக 4100 தொழிலாளர்கள் மற்றும் மறைமுகமாக 25,000 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆலையை மூடும் நிர்வாகத்தில் முடிவுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கக்கூடாது என தெரிவித்தனர்.
இதனையடுத்து தொழிற்சாலையை மீண்டும் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்த நிலையில் மறைமலைநகர் போர்டு ஆலையை டாடா நிறுவனம் வாங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியாதவும் செய்திகள் வெளியான நிலையில் மறைமலைநகர் போர்டு கார் தொழிற்சாலை ஜூன் 30ம் தேதியுடன் மூடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.