பிரியாவின் உடலை வாங்க மறுத்த பெற்றோர்!

Filed under: சென்னை |

இன்று மரணமடைந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதால் அவரது உடலை பெற்றோர்கள் வாங்க மறுத்துள்ளனர். இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தவறான சிகிச்சை செய்த மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் பிரியாவின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்தனர். இதையடுத்து பிரியாவின் உடலை பெற்றோர்கள் பெற்றுக் கொண்டதாகவும் அவரது வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரியாவின் தோழிகள் மற்றும் அவருடன் படித்த கல்லூரி மாணவிகள் நண்பர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை பிரியாவின் உடல் இறுதி சடங்கு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.