புதிய கேலரியை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

Filed under: அரசியல்,சென்னை |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேப்பாக்கம் மைதானத்தில் ‘முத்தமிழறிஞர் கருணாநிதி ஸ்டேண்டை’ திறந்துவைத்தார்.

சென்னை மெரினாவுக்கு அருகிலுள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூரு கிரிக்கெட் போட்டிகள் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்ந்து நடந்து வருகின்றன. சேப்பாக்கம் மைதானத்தை அதிநவீன வசதிகளுடன் ரூ.139 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அங்கு, புதிதாகக் கட்டப்பட்டுள்ள கேலரிக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், அதையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஐசிசி மற்றும் பிசிசிஐ&ன் தலைவர் சீனிவாசன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். விரைவில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்த மைதானத்தில் அதிகளவில் ரசிகர்கள் வந்து போட்டிகளைக் காண்பர் என தெரிகிறது.