இந்திய ராணுவத்தில் புதிய ராணுவ தளபதி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இருக்கும் தளபதி ஓய்வு பெற இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போது இந்திய ராணுவத்தின் தலைவராக இருப்பவர் நரவனே. இவர் ஏப்ரல் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார்.
அதனால் இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மனோஜ் பாண்டே ஒரு பொறியாளர் என்றும், இந்திய ராணுவத்தில் உள்ள ஒரு பொறியாளர் தளபதியாக நியமிக்கப்படுவது இந்திய ராணுவ வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.