பூஸ்டர் தடுப்பூசி மட்டுமே ஆயுதம்!

Filed under: சென்னை,தமிழகம் |

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்வதுதான் ஆயுதமாகும் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் பெரும்பாலானோர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டுள்ளனர். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தற்போது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் மக்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது. நேற்றைய கொரோனா பாதிப்பு 500ஐ நெருங்கிவிட்டதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார். மேலும் காய்ச்சல் சளி போன்ற எந்த அறிகுறி இருந்தாலும் உடனே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்றில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள பூஸ்டர் தடுப்பு ஊசி மட்டுமே ஆயுதமாகும் என்று தெரிவித்துள்ளார்.