பெரும்பாக்கத்தில் புதிய காவல் நிலையத்தை காவல் ஆணையர் திறந்துவைத்தார்!

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை பெரும்பாக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய காவல்நிலையத்தை சென்னை மாநகரா காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று திறந்து வைத்து, காவல் நிலைய பணிகளை துவக்கி வைத்தார்.

பெரும்பாக்கம், எழில்நகர், 8 மாடி அடுக்குக் குடியிருப்பு வளாகத்தில் இந்த புதிய காவல்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த காவல்நிலையத்தின் முதல் காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ள ரஞ்சித்குமார், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை வாழ்த்தினார். காவல்நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டார்.

இப்புதிய காவல்நிலையத்தின் ஆய்வாளர் ரஞ்சித் குமாரின் செல்லிடப்பேசி எண்களான 9840619597 மற்றும் 9498143067 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்களது புகார்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என காவல் ஆணையாளர் தெரிவித்தார்.