மகளின் காதலனை கொன்ற தந்தை!

Filed under: இந்தியா |

மத்தியபிரதேச மாநிலத்தில் மொரெனாவில் ரத்தன்பாசி கிராமத்தைச் சேர்ந்த ஷிவானி தோமர் (18) அருகில் உள்ள பலுபு கிராமத்தைச் சேர்ந்த ராதிஷ்யம் தோமர் (21) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் 3ம் தேதி ராதிஷ்யம் காணாமல் போனார். அதே தினத்தன்று, ஷிவானியையும் காணவில்லை. இவர்கள் இரு வீட்டாரின் எதிர்ப்புக்கு அச்சம் கொண்டு வீட்டைவிட்டு ஓடிவிட்டதாக இளைஞரின் பெற்றோர் நம்பி, இதுபற்றி போலீசில் புகாரளித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஷிவானியின் தந்தையிடம் நடத்திய விசாரணையில் அவர் தன் மகள் மற்றும் காதலனை கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். அதில், கடந்த ஜூன் 3ம் தேதி சுட்டுக் கொன்ற பின் அவர்கள் இருவரின் உடலை பெரிய கற்களில் கட்டி, முதலைகள் நிறைய சாம்பல் ஆற்றில் வீசியதாக அவர் தெரிவித்துள்ளார். இங்கு, 200க்கும் மேற்பட்ட முதலைகள் இருப்பதாக கூறப்படுகிறது. மகள் மற்றும் காதலனின் உடல் வீசப்பட்டுள்ள இடத்தை போலீசிடம் காட்டியுள்ளார். அங்கு, இருவரின் உடல்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.