மகளிர் ஐபிஎல் தொடக்கவிழா!

Filed under: இந்தியா,விளையாட்டு |

மார்ச் 4ம் தேதி முதல் மகளிர் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளது. தொடக்க விழாவில் பிரபல பாலிவுட் நடிகைகள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாண்டு முதல் மகளிர் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. 5 அணிகள் இதில் கலந்து கொள்ள இருப்பதாகவும் இந்த அணிகளுக்கான வீராங்கனைகள் சமீபத்தில் ஏலம் எடுக்கப்பட்டனர். மகளிர் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 4ம் தேதி முதல் தொடங்கவிருப்பது என்பதும் முதல் போட்டியில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ளன. போட்டியை 7:30 மணிக்கு தொடங்க இருக்கும் நிலையில் அதே நாளில் ஐந்து முப்பது மணி முதல் தொடக்க விழா நடைபெறும். இதில் பிரபல பாலிவுட் நடிகைகள் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக க்யாரா அத்வானி, கீர்த்தி சனோன் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாகவும் இன்னும் சிலரிடம் இந்த தொடக்க விழாவில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.