மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் தேர்வு எழுத பயம் என்பதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தகவல் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில் மாணவர்கள் பெரும் ஆர்வத்துடன் இன்று தேர்வு எழுதினர். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆசி வழங்கி வழியனுப்பினர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் தேர்வு பயம் காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.