மனைவிக்காக கடலில் குதித்த கிரிக்கெட் வீரர்!

Filed under: விளையாட்டு |

இந்திய அணி நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பரிதாபகரமாக தோற்றது. அதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். அடுத்து வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் டெஸ்ட் போட்டிகளில் அவர் இருக்கமாட்டார் என்று கூறப்படுகிறது.

இப்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பாக இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வு கிடைத்துள்ளது. அதனால் பலரும் தங்கள் குடும்பத்தினரோடு நேரத்தை செலவழித்து வருகின்றனர். அவ்வகையில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா குடும்பத்தோடு இப்போது சுற்றுலா சென்றுள்ள ரோஹித் ஷர்மா தனது மனைவி மற்றும் மகளுடன் கடலில் படகு சவாரி சென்றுள்ளார். அப்போது அவரின் மனைவியின் செல்போன் கடலில் விழுந்துவிட, கடலில் குதித்து அந்த செல்போனை ரோஹித் ஷர்மா மீட்டெடுத்து வந்துள்ளாராம். இதுபற்றி ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா பகிர்ந்த ஒரு பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலானது.