மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

Filed under: சென்னை |

சென்னையில் 11ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பள்ளி மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது வழக்கம் அதிகமாகி உள்ளது. இதையடுத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மனநல மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இன்று சென்னை கோயம்பேட்டில் 11ம் வகுப்பு மாணவர் அந்தோணி தினேஷ் என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர் கண்டித்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.