முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Filed under: சென்னை |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு குண்டுவெடிக்கும் என்று நேற்றிரவு இரவு 11.30 மணிக்கு கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் போன் செய்துவிட்டு போனை துண்டித்துள்ளார்.

இதுகுறித்து தேனாம்பேட்டை காவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். உடனே, போலீசார் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று அதிரடி சோதனை செய்தனர். அங்கு சந்தேகம் கொள்ளும்படியாக எந்தப் பொருட்களும் இல்லை. இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அந்த போன் நம்பரை வைத்து யார் போன் செய்து மிரட்டல் விடுத்தது என்ற தகவல் சேகரித்த போலீசார், தென்காசி மாவட்டம் ஆழ்வார் குறிச்சியை சேர்ந்த அந்தோணி ராஜ் என்பதும், அவர் நிலப்பிரச்சனை குறித்துப் போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்தியதாகத் தெரிகிறது. இதனால் போலீசாருக்கு தன் மீது கவனம் ஏற்படுத்தும் எண்ணத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது. தற்போது அவரைக் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.