முதல்வர் குறித்து இனி விமர்சிக்க கூடாது…ஸ்டாலினை எச்சரித்த உயர்நீதிமன்றம்

Filed under: Uncategory,அரசியல்,தமிழகம் |

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து கடுமையான விமர்சனங்களை வைக்க கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிகவும் கடுமையாக விமர்சிப்பதை ஸ்டாலின் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.

தமிழக முதலமைச்சர் குறித்து ஆதாரமற்ற விமர்சனங்கள் வைப்பதையும் மு.க ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும்.அரசியல் ஆதாயத்திற்கான தலைவர்கள் கடுமையான வார்த்தைகளை பேசுவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல. கருத்து சுதந்திரம் என்று தலைவர்கள் தவறான வார்த்தைகளை பேசுவது மக்களிடையே தவறான தாக்கத்தை உருவாக்கும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.