முன்னின்று சுகாதாரப் பணி செய்யும் அமைச்சர் !

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை  : உலகம் முழுவதும் 12 லட்சத்திற்கும் அதிமானவர்கள் பாதிக்கப்பட்டு 70000 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உலகையே உலுக்கும் கொரோனா கிருமியை ஒழிக்கப் பாடுபடுவது அனைவரின் கடமை. அந்த வகையில் தானே முன்னின்று மக்களின் சுகாதாரத்தைக் காக்க, நோய்த்தொற்று வராமல் தடுப்பதற்காக தமிழக அமைச்சர் திரு.D.ஜெயகுமார் இரவு பகல் பாராமல் பணி செய்து வருகின்றார்.

தமிழக அரசு மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை சிறப்பாகச் செய்து வருகின்றது. தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் பலர் கொரோனா கிருமியினால் பாதிக்கப்பட்டதால் தமிழ் நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள இந்த நேரத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்தவும் சமுகப் பரவல் இந்த காலத்தில் ஏற்படாமல் தடுக்கவும் தமிழக அரசு தீயணைப்புத்துறையின் மூலம் உயர்அழுத்த பெரு இயந்திரங்களை உபயோகித்து சென்னையில் பல பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து வருகின்றது.

இந்தப் பணியின் ஒரு பகுதியாக தமிழ்நாடு மீன்வளம்  மற்றும் பணியாளர் நிருவாக சீர்திருத்தத்துறை அமைச்சர் D. ஜெயகுமார் தீயணைப்புத் துறையின் இராட்சத இயந்திரத்துடன் பயணித்து சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து மக்களைக் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து காக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவுறுத்தியபடி மக்கள் சமூகவிலகலை கடைபிடித்து கொரோனா நோய்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தங்களைப் பாதுகாக்க வேண்டும். ‘விழித்திரு விலகியிரு வீட்டிலிரு’ என்பதை நாம் ஒவ்வொருவரும் உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர் மக்களிடம் தொடர்ந்து வலியுறுத்துகின்றார்.