ரம்ஜான் பண்டிகை தினப்பரிசு வழங்கிய உதயநிதி எம்.எல்.ஏ.

Filed under: சென்னை |

வருகிற 3ம் தேதி அன்று முஸ்லிம் பெருமக்கள் ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாட காத்திருக்கின்றனர். இதன் காரணமாக ரம்ஜான் பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளார் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்.

“என்னை தங்கள் வீட்டில் ஒருவனாக நினைத்து அன்பு பாராட்டும் என் தொகுதி மக்களுக்கு ரம்ஜான் திருநாள் பரிசுப் பொருட்களை வழங்கினேன்” என்று கூறியுள்ளார் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி.
இது குறித்து அவர் கூறும்போது, “என்னை தங்கள் வீட்டில் ஒருவனாக நினைத்து அன்பு பாராட்டும் என் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி இஸ்லாமிய பெருமக்களுக்கு, 10 ஆயிரம் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் திருவல்லிக்கேணி கில் ஆதேஷ் பள்ளியில் ரமலான் திருநாள் பரிசுப் பொருட்களை வழங்கினோம். பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு என்றும் கழகத்தின் பக்கம் நிற்கும் இஸ்லாமிய பெருமக்களுக்கு சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சேப்பாக்கம் பகுதி வெஸ்லி பள்ளியில் ரமலான் திருநாள் பரிசுப் பொருட்களை வழங்கி, வாழ்த்துகளைத் தெரிவித்துகொண்டோம்” என்று கூறினார்.